Thursday, January 10, 2013

RAINFALL PREDICTION 1

மழை அளவு கணிப்பு -1
து ஜோசியத்தின் மூலம் மழை கணிக்கும் தொடர். இதில் வரும் குறிப்புகளைக் கொண்டு,எந்த ஒரு சாதாரண வானிலை ஆய்வாளரும், வானிலை வரை படங்கள் உதவியுடன் கணிப்புக்களை சரி பார்த்துக் கொள்ளலாம். இதில் கண்டுள்ள முறையை,குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்காவது தொடர்ச்சியாக  குறித்துக்  கொண்டால் நம்பகமான காரணிகளை உருவாக்கிக் கொள்ளலாம். இதை முனைப்போடு யாராவது செய்தால், என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
அறிமுகம்        
வேதத்தில்,மழை அளவு கணிப்பு பூர்வ சித்தி-முன் அறிவு என்று நினைக்கப் படுகிறது.அஸ்வமேத யாகத்தில்,சம்பிரதாயமான வினா-விடை பகுதியில், ஒரு கேள்வி:
"எது பூர்வ ஸித்தி ?"
விடை::" மழையே பூர்வ ஸித்தி ".
ஏனெனில், ஒரு இடத்தில் மழை உண்டாவதற்கான காரணங்கள் முன்னதாகவே ஏற்ப்படுகின்றன.அவைகளைச் சரியாக கணித்தால், மழை பெய்யுமா இல்லையா என்று சொல்ல முடியும்.இதை வராஹமிஹிரரும் வலியுறுத்திச் சொல்கிறார். "ஒரு வானியல் நிபுணர் இரவும் பகலும் பாடுபட்டு மழை மேகங்களுக்கான அறிகுறியைக் கண்டறிந்தால்,அவர் வாக்கு, ரிஷிகளின் வாக்குப் போல், பொய்யாகாது"
"மற்ற விஷயங்களில் அறிவில்லாது போனாலும், மழை கணிக்கும்  விஞ்ஞானத்தில் ஒருவன் தேர்ச்சி பெற்றால், அவனை பெரிய ஜோதிட விஞ்ஞானியாக கலியுகத்தில் கருதப் படுவான்" (ப்ருஹத் ஸம்ஹிதை -அத.21,ஸ்லோகம் 3 &4)
கர்க, பராசர, காஷ்யபர், வத்ஸர்  என்று பல முனிவர்கள் மழை கணிப்பு நுட்பத்தை கற்ற ஆசிரியர்கள். இவைகளை ப்ருஹத் ஸம்ஹிதை அத் .21-28, மற்றும் ப்ரச்ன மார்க்க அத்.25, புத்தகங்களில் காணலாம்.
வேண்டுபவை
சாந்திரமான மாதங்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் . வேத ஜோதிடப்படியான திதி மற்றும் 27  நட்சத்திரங்களைப் பற்றியதான அறிவு.
குறித்த நேரத்தில் சந்திர, சூரிய பயணத்தை கணிக்கும் ஏதாவது  ஒரு ஜோதிட கணினி மென்பொருள்.
முறையான இடைவெளிகளில் நாள் முழுதும் வான் வெளியைக் கூர்ந்து கவனித்தல்.
இந்த கவனிப்பு சாந்திர மாதம் கார்த்திகை தொடங்கி ச்ரவண மதம் வரை இருத்தல் வேண்டும்.
எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
மூன்று விதமான நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன -.இரண்டு ப்ருஹத் ஸம்ஹிதையும், ஒன்று  ப்ரச்ன மார்க்கமும் கொடுத்துள்ளன. ஏன் இந்த வித்தியாசங்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.என்னுடைய விளக்கங்களை அடைவுக் குறிகளில் கொடுத்துள்ளேன்.
  1. சாந்திர மாதம் கார்த்திகையில் சுக்ல பக்ஷம் முதல் நாள் [அக்டோபர்-நவம்பர்]- சித்திசேன முறை (கேரளாவிலோ அல்லது லக்ஷத்தீவுகளிலோ தென் மேற்கு பருவ மழை தொடுங்குவதை சரி பார்க்கவும் )
  2. மார்கசீர்ஷம் மாதம், சந்திரன் பூராட நக்ஷத்திரத்தை வளர்பிறையில் கடக்கும் நாள் [நவம்பர் - டிசம்பர்]- கர்க ரிஷி (மத்திய அல்லது வட இந்தியாவில் பெய்யும் முதல்  மழையை கவனிக்கவும்  )
  3. சூரியன் பூராட நக்ஷத்திரத்தில் நுழையும் நாள். இது தனுர் ராசிய்ல் 13-20 டிகிரியில் ஏற்ப்படும்.இந்நாளிலிருந்து 14 நாட்கள், மழை உருவாகும்  கால கட்டம் அல்லது கர்ப்போட்டம் எனப்படும்.
கர்ப்போட்டத்தின் முக்கியத்துவம் 
இந்த 14 நாட்களும் சூரியன் பூராட நகஷத்திர மண்டலத்தை   முழுக்கக் கடக்கும் நேரம். ஒரு நக்ஷத்திரத்தின் அளவு 13 டிகிரி 20 நிமிடங்களாகும். சூரியன் ஒரு நாளைக்கு உத்தேசமாக ஒரு டிகிரி கடக்கும். கர்போட்டம் சமயத்தில் சூரியன் பூராட நக்ஷத்திர மண்டலத்திலேயே சஞ்சரிக்கும். வானிலை கணிப்பின் பூர்வாங்கமாக, கரு முகில்கள் ஆகாயத்தில் தென் பட்டு, சூரியனை மறைக்கப்படுகிறதா என்று நோக்க  வேண்டும்.
இந்தக் கட்டுரையில் கூறியுள்ளவை எந்த இடத்திலிருந்து கண்காணிக்கிறோமோ அந்த இடத்திற்கு மட்டுமே பொருந்தும்.
முன் காலங்களில், ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு ஜோசியர் அல்லது கணிகன் இந்த வேலையைச் செய்து வந்தார். இன்று வானிலை ஆராய்ச்சி பரந்த பிரதேசங்களுக்கு கணிக்கிறது. ஆயினும், பண்டைய இந்திய முறை ஒவ்வொரு இடத்திற்கும்  மழை பெய்யுமா இலையா என்று தெரிவித்தது. இதற்கு கண்காணிப்பவர் தொடர்ச்சியாக அந்த இடத்தில் இருந்து கொண்டு கவனித்து வரவேண்டும். குறைந்த பட்சம் மார்க்கசீருஷ மாதத்திலிருந்து பால்குனி வரை நிச்சயமாக இருக்கவேண்டும், மற்றைய மாதங்களில்  குறிப்பிட்ட நாட்களில் மட்டும்.
கர்ப்போட்டத்தில், கார்மேகங்கள் சூழ்ந்து சூரியனை மறைத்து இருந்தால்,
  • முதல் நாளாக இருந்தால், சூரியன் திருவாதிரை நக்ஷத்திரத்தைக் கடக்கும்போது (மிதுன ராசியில்), 14 நாட்களும் அங்குமிங்குமாக, விட்டு விட்டு மழை பெய்யும்.
  • அதே மாதிரி  இரண்டாவது நாள், 14 நாளும்,  சூரியன்  புனர்வசு நக்ஷத்திரத்தைக் கடக்கும்போது (மிதுன,கடக ராசிகளில்) அங்குமிங்குமாக விட்டு விட்டு மழை பெய்யும் 
  • மூன்றாவது நாள் தென்பட்டால், சூரியன் புஷ்ய நக்ஷத்திரத்தை கடக்கும்போது (கடக ராசியில்  ) அதே மாதிரி மழை பெய்யும் 
இதே மாதிரி மூல நக்ஷத்திரம் வரை கணிக்க முடியும்.
இதற்கான காரணம் அறிவு பூர்வமானது. ஏனெனில் தனுர் ராசியில் பூராட நக்ஷத்திரத்தில் கர்போட்ட சமய 14 நாட்களில் ஒவ்வொரு நாளும், சூரியன் அடுத்த வருடத்தில், திருவாதிரை நக்ஷத்திரத்தில் (தமிழ் ஆனி  மாதம்/ மிதுன ராசி/ சாந்த்ர மாதம் ஜ்யேஷ்ட்டா ) ஆரம்பித்து அடுத்த மார்க்கசீருஷ  மூலம் நக்ஷத்திரம் வரைக்கும், சார்ந்திருக்கும்.
சூரியனின் 14 நாள் கடத்தல், கீழ்க் காணும் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் கொடுக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, கர்ப்போட்டத்தின் 1ம் நாள், திருவாதிரையில் சூரியனின் 14 நாட்களின் சஞ்சரிப்பை பாதிக்கும்.
1ம் நாள் - திருவாதிரை
2ம் நாள்- புனர்பூசம்
3ம் நாள் - பூசம்
4ம் நாள் - ஆயில்யம்
5ம் நாள் - மகம்
6ம் நாள் - பூரம்
7ம் நாள் - உத்திரம்
8ம் நாள் -ஹஸ்தம்
9ம் நாள் - சித்திரை
10ம் நாள் - சுவாதி
11ம் நாள் - விசாகம்
12ம் நாள் - அனுஷம்
13ம் நாள் - கேட்டை
14ம் நாள் - மூலம்
ஏதேனும் ஒருநாளில் ஆகாயம் நாள்  முழுதும் மேக மூட்டமாக இருந்தால், சூரியன் அந்த நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் போது மழையை எதிர் பார்க்கலாம்.
இந்த வருடம் 28-12-2012 அன்று கர்ப்போட்டம் ஆரம்பமானது. அன்று முழுதும், நான் தங்கியிருக்கும் சென்னைப் பகுதியில் மேக மூட்டம் இருந்தது.நடு   நிசியில் மழை பெய்தது. இம்மாதிரி மழை 195 நாட்களுக்குப் பின் வரும் மழையை கெடுக்கும். ஆகையால், முதல் கட்ட கணிப்பு, நான் இருக்கும் பகுதியில் 7 நாட்களுக்கு பரவலான மழை, திருவாதிரை நக்ஷத்திரத்தின் முதல் பாதி சஞ்சரிப்பில் இருக்கும். ஜூன் மாதம் (2013) விடிகாலை சூரியன் திருவாதிரை நக்ஷத்திரத்தில் நுழைகிறான். கர்ப்போட்டத்தின் போது மேக மூட்டம் நல்லது;ஆனால் மழை பெய்வது நல்லதல்ல. சிறு சாரல் பரவாயில்லை, அனால் மழை கூடாது.
மறு நாளும் மேகமூட்டம் தொடர்ந்தது. ஆகையால், சூரியன் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் நுழைந்தவுடன் (ஜூலை 6ம் தேதிக்குப் பிறகு) நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.
நல்ல மழை பெய்யுமா என்பதை கீழ்க் கண்ட காரணிகளைக் கொண்டு கணிக்கலாம்:

  1. காற்றோட்டம் 
  2. மழை 
  3. மின்னல் 
  4. இடி 
  5. மேகமூட்டம் 
அடுத்தபடியாக:
இந்த 14 நாட்களும், மேற்கண்ட 5  காரணிகளையும் கண்காணிக்க வேண்டும். அதன் பின்னர், அடுத்த நான்கு மாதங்களும், பால்குனி மாதம் முடியும் வரையில், தினந்தோறும் வான்வெளியை கண்காணித்து வரவேண்டும். ஏதாவது ஒருநாளில் இந்த 5 காரணிகளும் நன்கு தென்பட்டால், 195 நாட்களுக்குப் பிறகு, நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.
வேறு விதமாகக் கூறினால், நாம் பார்வையிடும் நாளின் பட்சம், திதியை குறித்துக் கொள்ளவேண்டும். உ-ம்:  மார்கசீர்ஷம் கிருஷ்ண பட்சம், த்விதீயை.  இதற்கான மழை விளைவை ஜஎஷ்ட்டா மாதம், சுக்கில த்விதீயை ஆகும். அதாவது ஆறரை மாதங்களுக்கு முன்னால் கணிக்க முடியும். நாம் பார்த்தது ஒரு சுக்கில திதி என்றால், மழை விளைவு 6 மாதம் கழித்து வரும் கிருஷ்ணா பட்சம், அதே திதியாகும். நாம் பார்த்தவை காலை வேளை என்றால், மழை எதிர்பார்ப்பு குறிப்பிட்ட கணித்த திதியில் மாலையில் விளையும்.
மேகங்களும்,காற்றோட்டமும் ஒரு குறிப்பிட்ட திசையிளிருந்தால், கணித்த நாளில், மழை எதிர் திசையில் இருக்கும். நாம் இவற்றையும் , அதாவது காற்று மேகங்கள் செல்லும் திசையையும் குறித்துக் கொள்ளவேண்டும்.
நாம் கண்காணிக்க வேண்டிய அம்சங்கள்:

குறிப்பு: ஒவ்வொரு நாளும் கவனிக்கப்பட வேண்டியவை. அந்த நாளிலிருந்து அதற்குப் பொருத்தமான 195வது நாளாகும்.
1. காற்றோட்டம்  
மிதமான நல்ல காற்று = நல்ல மழை
வடக்கு, வடகிழக்கிலிருந்து குளிர் மிதமான காற்று= நல்ல மழை
அதிகமான காற்று= மழை மேகங்கள் கூடி சிதறும்.
புழுதிப் புயல் = மழை இருக்காது.
2. மழை
மார்கசீர்ஷத்தில் மழை இருக்காது. அப்படி அதிகமாக மழை பெய்தால், அதற்குப் பொருத்தமான நாளின் மழையை பாதிக்கும். இலேசான தூறல் அல்லது சாரல் இருந்தால், ஆறரை மாதங்களுக்குப் பிறகு  நல்ல மழை உண்டு.
3. மின்னல்
மின்னல் = நல்ல மழை.
வானவில் காலையிலோ அல்லது மாலையிலோ = நல்ல மழை.
4. இடி 
மெல்லிய உருட்டொலி = நல்ல மழை
பலத்த இடியோசை = மழை மேகங்கள் சிதறும்/.
5. மேகங்கள்  
     ஆகாயத்தில் மிகப்பெரிய, பிரகாசமான, அடர்த்தியான மேகங்கள் = நல்ல மழை.
ஊசி, கத்தி வடிவில் மேகங்கள்= நல்ல மழை
இரத்தச் சிவப்பில் மேகங்கள் = நல்ல மழை.
அனுமானம்
மார்கசிர்ஷமிலிருந்து பால்குனி வரை, எந்த ஒரு நாளாவது இந்த 5 காரணிகளும் தென்பட்டால், அதற்க்கான விளைவு நாளில் மழையின் அளவு ஒரு துரோணமாகும். (ஒரு துரோணம் என்பது  200 பலங்கள் . இதற்கான இன்றைய அளவு தெரியவில்லை. அந்த நிலைமைகள் ஏற்ப்பட்டு மழை பெய்தால், அவற்றைக் கொண்டு இந்த அளவை அறியலாம்)
இந்த காரணிகள் எது ஒன்று இல்லையென்றாலும், அளவின் விளைவை கால் பாகம் குறைத்துக் கொள்ளவேண்டும்.
மும்முனை கண்காணிப்பு
1. தரை சார்ந்தவை
2. வளி மண்டலம் சார்ந்தவை
3. கிரகங்கள் சார்ந்தவை
1. தரை சார்ந்த காரணிகள் கண்காணிப்பு 
1. பறவைகளின் கீச்சு கீச்சென்ற சப்தம்
2.மிருகங்களின் நிம்மதியான நடை; இனிய குரலோசை.
3.சிறுவர்களின் குதூகலமான விளையாட்டு
4. மரங்களில் துளிர்
5.நோயில்லாமல் மரங்கள் வளர்தல்.
2.வளிமண்டலம் சார்ந்தவை கண்காணிப்பு.
1,மேகங்கள் முத்து அல்லது வெள்ளி நிறம்.
2. மேகங்களின் வடிவு நீர்வாழ் உயிரினங்களை ஒத்ததும், மிகப் பெரியட்கும், அடர்த்தியும்  கொண்டுள்ளது
3. மேகங்கள் பிரகாசமான சூரியனால் கொளுத்தப் படுகின்றன.
4.மிதமான காற்று ( 3ம், 4ம் ஒன்றாகத் தென்பட்டால், 195வது நாள் பேய் மழை பெய்யும்)
5.சூரியன், சந்திரனைச் சுற்றி தடித்த, பளபளப்புடன் கூடிய பிரகாசமான ஒளிவட்டம்.
6.ஆகாயத்தில் பருத்த அல்லது பஞ்சு போன்ற ஊசி அல்லது கத்தி வடிவில் மேகங்கள்.(உயர் வானத்து மேகம் சிரஸ் என்று அழைக்கப் படுவது)
7.சிவப்பு அல்லது  நீல நிற மேகூடிய மேகங்கள்.கங்கள்
8.ரம்மியமான கருக்கல் அல்லது அந்தி வேளை வெளிச்சம்
9. மெல்லிய உருட்டலோசை இடி.
10. கீழ் வானத்தில் வானவில்
11/மார்கசிர்ஷம், புஷ்ய மாதங்களில் அந்தி விடிகாலை நேரத்தில் தொடுவானத்தில் சிவப்பொளி.
12.ஒளிவட்டத்துடன்  மேகங்கள்
மாதவாரியான கண்காணிப்பு
மார்கசிர்ஷம் மாதத்தில்,
*.கலையிலும், மாலையிலும் சிவந்த சூரியன் , செவ்வானம் சூரியோதயத்திலும் , அச்தமனத்திலும்.
*.ஒளிவட்டத்துடன் மேகங்கள்
*.கடுங்குளிர்.
புஷ்ய மாதத்தில்,
*காலையிலும், மாலையிலும் சிவந்த சூரியன்,
*ஒளிவட்டத்துடன் மேகங்கள்.
*அதிகமான பனிப்பொழிவு.
மாக மாதத்தில்,
*பலத்த காற்று,
*சூயோதயத்திலும், அச்தமனத்திலும் சூரியனும், சந்திரனும், மேகங்களினாளும்பநியாலும் மூடி, மங்கலாகத் தெரிதல்,
*மூடுபனி,அதிகக் குளிர்.\
பால்குனி மாதத்தில்,
*தாறுமாறான,உக்கிரமான காற்று,
*பழுப்பு மஞ்சள் சூரியன்,
*சூரியன்  சந்திரனைச் சுற்றி ஒழுங்கில்லாத, உடைந்த ஒளிவட்டங்கள்.
*ஆகாயத்தில் பளபளப்பான மேகங்கள் சஞ்சரித்தல்.
மேற்க்கண்டவை நல்ல மழைக்கு அறிகுறிகள்.
சைத்ர ,வைசாக மாதங்களில் நல்ல காற்று, மேகங்கள், ஒளிவட்டங்கள் இருப்பின், 195வது நாளில் மழைக்கான அறிகுறிகள் உண்டு.
மார்கசிர்ஷத்திளிருந்து பால்குனி வரைக்குமான நான்கு மாதங்களில் கீழ்க்காணும் அம்சங்கள் தென்பட்டால், மழை உருவாகுவதை கெடுக்கும்:

  1. விண்கற்கள் பொழிவு 
  2. இடிமின்னல் 
  3. புழுதிப்புயல் 
  4. மேகங்களில் நகரம் மாதிரி வடிவு தென்படுதல் 
  5. வளி மண்டலத்தில் மேகங்கள் , ஆகாய நிறம் , மற்றும் சூர்யோதயம்,அச்தமனங்களில், இயற்க்கைக்கு மாறாக நிகழ்வுகள் தென்பட்டால் 
  6. மழை 
  7. வால்  நட்சத்திரம்  
  8. கிரகணங்கள் 
  9. சூரியனில் கரும் புள்ளிகள் 
III. நான்கு மாதங்களில் கிரகங்களை கண்காணிப்பது  
மழை உருவாகுவதற்கான நல்ல அறிகுறிகள்,
-இரவில் கிரகங்கள் தெளிவாகவும்,பளிச்சென்றும் தென்படுதேள் 
-கிரகங்கள் வடக்கு சாய்மானமாக நகர்தல் 
-சந்திரன், நக்ஷத்திரங்கள் வெண்மையாக தோன்றுதல் 
மழை உருவாகுவதைக் கெடுக்கும் அம்சங்கள்,
*கிரகணங்கள் 
*கிரகங்கள் ஒன்றை ஒன்று கடக்கும் போது (மழை நிகழ வேண்டிய காலத்தில் பல நாட்களுக்கு மழையை கெடுக்கும்)
நான்கு மாதங்களில் சந்திரனின் நிலை.
மழை உருவாகுவதற்கு சாதகமான மேற்கூறிய மூன்று அம்சங்களும் இருக்கும் ஒரு நாளில், சந்திரன் பூராடம்,உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரோகிணி நக்ஷத்திரங்களைக் கடந்தால்,195 நாட்களுக்குப் பின்,மழை அபரிமிதமாக இருக்கும்.
அதேபோல், அந்த மாதிரியான ஒரு நாளில், சந்திரன் திருவாதிரை, ஆயில்யம், மகம், சுவாதி மற்றும் சதய நக்ஷத்திரங்களைக் கடந்தால், பின்னர் மழை பலநாள் தொடரும்.
மாறாக, இந்த மூன்று அம்சங்களும் கெட்டால், மழை வறட்சி இருக்கும்.
மார்கசிர்ஷம் மாடத்தில்,இந்த மூன்று அம்சங்கள் இருந்து, கெடுதல் அம்சங்கள் மறைந்திருந்தால், 195 நாட்களுக்குப் பிறகு, எட்டு நாட்கள் மழை தொடரும்.
அதே போல் புஷ்ய மாதத்தில் நடந்தால் 6 நாட்கள் தொடரும்; மக மாதத்தில் நடந்தால் , 16 நாட்கள் தொடரும்; பால்குனி மாதத்தில் நடந்தால்  24 நாட்கள் தொடரும்; சைத்திர மாதத்தில் நடந்தால் , 20 நாட்கள் தொடரும்; வைசாக மாதத்தில் நடந்தால் , 3 நாட்கள் தொடரும்.  
(தொடரும்)
தொடர்புள்ள கட்டுரைகள்:
 Planetary connection to El Nino - some tips from rainfall astrology
Some astrological thoughts on cyclones Sandy and Nilam.